அதிக ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக வருங்கால வைப்புநிதி நிறுவனம் அறிவித்துள்ளது…!

18
Advertisement

அதிக ஓய்வூதியத்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்தது.

இதற்கிடையே விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மேலும் நீட்டிக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தது. இந்த நிலையில், அதிக ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக வருங்கால வைப்புநிதி நிறுவனம் அறிவித்துள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் ஓய்வூதிய தொகையை உயர்த்திக்கொள்வதற்கு இதுவரை 12 லட்சத்துக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.