செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கண்டு வியந்த பிரதமர்

310

இந்தியாவின் சதுரங்க தலைநகரமாக சென்னை திகழ்கிறது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவி்த்தார். வியக்கத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது என்றும பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, மிகக்குறைவான காலகட்டத்தில் சிறப்பான ஏற்பாடுகளை செய்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.  தமிழகத்திற்கும், சதுரங்கபோட்டிக்கும் வரலாற்று ரீதியாக நீண்டகால தொடர்பு இருக்கிறது என்பதையும் முதல்வர் சுட்டிக்காட்டினார். ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பான சாதனைகளை புரி்ந்துவருவதை பிரதமர் குறிப்பிட்டார்.

மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடைபெறுகிறது என்றும் பிரதமர் கூறினார். இந்தியாவின் செஸ் தலைநகரமாக சென்னை திகழ்கிறது என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். தமிழ்நாட்டின் விருந்தோம்பலை பாராட்டி பேசிய பிரதமர் மோடி, விருந்தோம்பல் அதிகாரத்தில் உள்ள “இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” என்கிற குறளை மேற்கோள் காட்டி பேசினார்.