சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்துள்ளது.

343

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக குறைந்திருந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 890 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 39 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 64 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 64 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.