இலங்கை அரசை கவிழ்க்க முயன்ற போராட்டத்தில் அரசியல் தலைவர்களின் பங்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை

218

இலங்கையில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்து அரசை கவிழ்க்க முயன்ற போராட்டத்தில் அரசியல் தலைவர்களின் பங்கு குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். இதைத்தொடர்ந்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற எம்.பி.க்கள் வாக்களித்து அவரை தேர்வு செய்தனர். முன்னதாக இந்த ஓட்டெடுப்பை தடுக்கும் வகையிலும், அரசை கவிழ்க்கும் வகையிலும் நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து இருந்தனர். இதன் பின்னணியில் சில அரசியல் தலைவர்கள் இருந்தது தெரியவந்து உள்ளது. இந்த சதி குறித்து விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.