நொடி போதில் அச்சம்பவத்தில் இருந்து தப்பித்த மக்கள்

55

இராமநாதபுரம் அருகே, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இராமநாதபுரம் வண்டிக்கார தெரு, பகுதியில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன் பனைக்குளத்தைச் சேர்ந்த முகமது அமீன் என்பவர் தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். இதனையடுத்து காரின் முன்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, காரின் அருகே டிரான்ஸ்பார்மர் இருந்த நிலையில் தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.