திருமலாபுரம் ஊராட்சி மன்ற செயலாளரை கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

66

திருமலாபுரம் ஊராட்சி மன்ற செயலாளரை கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஊராட்சி மன்ற செயலாளர் மக்கள் பணிகளை செய்யாவிடாமல், இடையூறாக இருப்பதால், பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவர் கனிராஜா மற்றும் துணைத் தலைவர் உட்பட 8 வார்டு உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.