குடியரசு தலைவர் பதவியேற்பு விழா- இருக்கை ஏற்பாடு முறையாக செய்யப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

133

குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில், இருக்கை ஏற்பாடு முறையாக செய்யப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. புதிய குடியரசு தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்று கொண்ட நிலையில், பதவியேற்பு விழாவில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு, பதவிக்கு ஏற்ப இடம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி உறிப்பினர்கள், பதவியேற்பு விழா முடிந்தவுடன், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் கடிதம் எழுதி கொடுத்து, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். உள்துறை அமைச்சகத்தின் முன்னுரிமை உத்தரவின்படி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஏழாவது இடத்தில் உள்ளதால் மூன்றாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.