தேசிய லோக் அதாலத்தில் ஒரே நாளில் 79,599 வழக்குகளுக்கு தீர்வு

152
Advertisement

தமிழகம் முழுவதும் ‘தேசிய லோக் அதாலத்’ என்ற மக்கள் நீதிமன்றம் நேற்று நடத்தப்பட்டது. இதில் சென்னை ஐகோர்ட்டில் 4 அமர்வுகளும், மதுரை ஐகோர்ட்டில் 4 அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா அளவுகளில் என மாநிலம் முழுவதும் மொத்தம் 419 அமர்வுகளும் வழக்குகளை தீர்வு காண்பதற்காக எடுத்துக் கொண்டன.


தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 79,599 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 63 ஆயிரத்து 348 வழக்குகளும், நீதிமன்ற விசாரணைக்கு வராத 12 ஆயிரத்து 251 வழக்குகளும் இதில் அடங்கும்.