நாடு முழுவதும் அமையவுள்ள 499 நீட் தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது…

172
Advertisement

வருகின்ற மே 7 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

நீட் தேர்வு எழுத நாடு முழுவதும், 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், தேர்வு நடக்க உள்ள நகரங்களின் விவரங்களையும், விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவியருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நகரங்களின் பட்டியலையும் தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமையின் மூத்த இயக்குநர் சாதனா பிரஷார் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீட் தேர்வுக்கான மையங்கள் 499 நகரங்களில் அமையும் என்றும் இந்தியா தவிர 14 நகரங்களில் மே 7 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.