வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தேடும் பணி தீவிரம்

191

இமாசலபிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், இமாசலபிரதேசத்தில் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. ஆறுகள், கால்வாய்கள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சம்பா மாவட்டத்தில் ஏற்பட்டது வெள்ளப்பெருக்கில் தாரேடி, கோடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 6 பேர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

8 நடை மேம்பாலங்கள், ஒரு பசு கொட்டகை ஆகியவையும் அடித்துச் செல்லப்பட்டன. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க தேசிய பேரிடர் மீட்புக்குழு உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.