வாயால் ரிப்பனைக் கடித்து விழாவைத் தொடங்கி வைத்த அமைச்சர்

219
Advertisement

அமைச்சர் ஒருவர் வாயால் ரிப்பனைக் கடித்து விழாவைத்
தொடங்கி வைத்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தி பாகிஸ்தான் டெய்லி என்னும் நாளிதழ் இந்த வீடியோவை
ட்டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைச்சராக இருப்பவர் ஃபயாஸ்
உல் ஹஸன் செஹான். இவர் லாகூரில் நடைபெறும் விழா
ஒன்றைத் தொடங்கி வைப்பதற்காக வந்தார்.

அப்போது சம்பிரதாயப்படி கத்தரிப்பானால் ரிப்பனை வெட்டி
விழாவைத் தொடங்கி வைக்க முயன்றார்.

ஆனால், ரிப்பன் வெட்டுப்படாமல் போகவே,
சட்டென்று ரிப்பனை இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு
வாயால் கடித்தார். மூன்றுமுறை கடித்த பிறகு ரிப்பன் இரண்டாக
வெட்டுப்பட்டது சாரி….கடி பட்டது…

வெற்றிகரமாக ரிப்பனைக் பல்லால் கத்தரித்து விழாவைத்
தொடங்கி வைத்த மகிழ்ச்சியில் அரங்கத்துக்குள் புன்னகை
தவழ நுழைந்தார் அமைச்சர் ஃபயாஸ்.

அமைச்சரின் இந்தச் செயல் நெட்டிசன்களால் கிண்டலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.