மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

65
Advertisement

ஐ.பி.எல் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிரடியாக ஆடிய ஸ்டாய்னிஸ் 47 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு, இஷான் கிஷன், ரோகித் சர்மா சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.

கடைசி ஓவரில் மும்பை அணி வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிறப்பாக பந்து வீசிய மோஷின் கான் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.