மாநிலங்களவை கூட்டத்தொடரில் இருந்து எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை

191

மாநிலங்களவை கூட்டத்தொடரில் இருந்து எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 19 எம்.பி-க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முன்னதாக நேற்று முன்தினம் மக்களையில் 4 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளனர். நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் தலைவருக்கான அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதேபோன்று, காங்கிரஸ் எம்.பி-க்கள் இன்று காலை 10.15 மணியளவில் காங்கிரஸ் அலுவலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளனர்.