உக்ரைனின் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகள் கடும் கண்டனம்

275

உக்ரைனின் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உக்ரைனின் டொனட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அதிபர் புதின் நேற்று அறிவித்தார். இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாள கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகளும் தெரிவித்து வருகின்றன. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவின் ஆதரவுடன் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதில், உக்ரைனின் எல்லைகளில் ரஷ்யாவால் கொண்டு வரப்பட்ட எந்த ஒரு மாற்றத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்க கூடாது மற்றும் ரஷ்யா உடனடியாக படைகளை வாபஸ் பெறுமாறு அந்த தீர்மானத்தில் கோரப்பட்டது. இந்த கண்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா, இதற்கு அதிகாரபூர்வ அனுமதி வழங்க மறுக்க வேண்டும் என்று ரஷ்யா கோரியுள்ளது. மேலும், தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்தது.

இந்த தீர்மானத்திற்கு 10 நாடுகள் வாக்களித்த நிலையில், வாக்கெடுப்பில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்தன. இந்த கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற ரஷ்யா தடை கொண்டு வந்தால் கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா பாதுகாப்பு சபையில் பங்கேற்று வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.