ஸ்ரீபெரும்புதூர் அருகே பா.ஜ.க ஊராட்சி மன்ற தலைவர் வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

41
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர்.

பா.ஜ.க SC, ST பிரிவு மாநில பொருளாளரான இவர், வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர் நேற்று சென்னையில் இருந்து காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது,  நசரத்பேட்டை சிக்னல் அருகே காரை வழிமறித்த மர்ம கும்பல், காரின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்த நிலையில், அச்சம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், காரில் இருந்து இறங்கி ஓடியுள்ளார். அவரை துரத்திச் சென்ற கும்பல் சாலையில் சரமாரியாக வெட்டிக் கொன்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு போலீசார், கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கரின் நண்பர் குமரன், தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது சங்கரும் அதே பாணியில் வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.