தன்னை சீண்டிய சிறுமியை தாக்கும் குரங்கு

34
Advertisement

எப்போது விலங்குகளிடம் கட்டுப்பாட்டுடன் பழகவேண்டும்.அவைகளுக்கென தனி குணம் உண்டு  என்பதை மறக்கக்கூடாது.இதனை உணர்த்தும் பல வீடியோக்களை இணையத்தில் பார்க்கிறோம்.

இந்நிலையில், சிறுமியை லாங்கூர் குரங்கு ஒன்று தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.உயிரியல் பூங்கா ஒன்றில், கூண்டில் அடைக்கப்பட்ட சில லாங்குர் குரங்குகளில் ஒன்றை பார்வையாளர்களில் ஒரு சிறுமி  மிக அருகில் நெருங்கி அதை சீண்டுகிறார்.ஒருகட்டத்தில் கோபமடைந்த அந்த குரங்கு கண்ணிமைக்கும் நேரத்தில்,சிறுமியின் தலைமுடியை பிடித்து விடுகிறது.

Advertisement

https://www.instagram.com/p/CgG0eqBoE4E/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

சிறுமியின் முடியை நன்றாக பிடித்துக்கொண்டு உள்ளே  இழுக்கிறது அந்த குரங்கு.வலியில் சிறுமி குரங்கின் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்.ஆனால் முடியவில்லை, சிறுமியின் பின்னே இருந்த மற்றொரு நபர் சிறுமிக்கு உதவுகிறார்.பின்பு சில நிமிடங்களில் சிறுமியின் முடியை விட்டுவிடுகிறது அந்த குட்ரங்கு.

இதுபோன்ற வீடியோக்கள், மனிதன் மனிதனாக அவன் இடத்தில் வாழவேண்டும்,விலங்குகள் அதன் வாழ்விடத்தில் தான் வாழ  வேண்டும் என்பதை உணர்த்துகிறது.