பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட அண்ணன் வராததால் சிறுமி தற்கொலை

290
Advertisement

பிறந்த நாள்  அன்று  கேக் வெட்டி கொண்டாட அண்ணன் வராததால் மனமுடைந்த சிறுமி, தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம்,சென்னை  பெரும்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு சந்திரன் என்ற மகனும், உதயகுமாரி  வயது (16) என்ற மகளும் உள்ளனர். சித்தலப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உதயகுமாரி 10ம் வகுப்பு படித்து வருகிறார் . நேற்று முன்தினம் இவருக்கு பிறந்தநாள் என்பதால், தனது அண்ணன் சந்திரன் வந்தவுடன், தனது 2 தம்பி மற்றும் நண்பர்களுடன் சேர்த்து கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்துள்ளார்.

அதன்படி, புத்தாடை உடுத்திக்கொண்டு அண்ணன் வருகைக்காக, தம்பிகள் மற்றும் நண்பர்களுடன் மிகுந்த ஆவலுடன் காலை முதல் காத்திருந்துள்ளார். ஆனால் மாலை ஆகியும் சந்திரன் அண்ணன்  வரவில்லை. இதனால், விரக்தியடைந்த சிறுமி தனது அறையில் நைலான் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த பெரும்பாக்கம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிறந்த நாளன்று சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.