அதிகாரிகள் சென்ற படகை மீனவர்கள் கவிழ்க்க முயற்சி

46
Advertisement

கடலூர் அருகே ஆய்வுக்காக அதிகாரிகள் சென்ற படகை மீனவர்கள் கவிழ்க்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்த தடை விதிக்கப்படுள்ளது. தடையை மீறி மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதை தடுக்க, மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நடு கடலில் ஆய்வு மேற்கொண்டர்.

அப்போது சுருக்குமடி வலையினை பயன்படுத்தி மீன்பிடித்த மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும், மீனவர்களின் படகையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  இதனால், ஆத்திரமடைந்த மீனவர்கள் ஒன்று சேர்ந்து அதிகாரிகள் சென்ற படகை ராட்ஜத அலைகளை உருவாக்கி கடலில் கவிழ்க்க முயற்சி செய்தததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.