சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஜூன் 13) காலை திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கிங் சென்ற அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனே டாக்ஸி பிடித்து வீடு வந்து சேர்ந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
சென்னையில் மட்டும் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும், சோதனை நிறைவு பெற்றவுடன் பேசுவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.இந்நிலையில் இரண்டாவது முறையாக தலைமை செயலகத்தில் ரெய்டு நடவடிக்கைகள் அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் அரங்கேறியுள்ளது.
இந்த சோதனையில் அமலாக்கத்துறை, இந்தியன் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான ஆவணங்களை எடுத்து கொடுக்கும் வகையில் அமைச்சரின் உதவியாளர்கள் அறையில் உள்ளனர். தற்போது அமைச்சரின் அறையை உள் தாள வைத்து சோதனை நடந்து வருகிறது.