கர்நாடகா மேல் சபையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு வருகிற 30-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது…..

83
Advertisement

கர்நாடக மேல் சபையில் பாஜக உறுப்பினர்களாக இருந்த பாபுராவ் சின்சனசூர், சங்கர், லட்சுமண் சவதி ஆகியோர் தங்களின் M.L.C பதவியை ராஜினாமா செய்தனர்.

அதில் லட்சுமண் சவதி, பாபுராவ் சின்சனசூர் ஆகியோர் காங்கிரசில் சேர்ந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். இதில் லட்சுமண் சவதி, MLA-வாக தேர்ந்தெடுககப்பட்டுள்ளார். இந்த நிலையில் கர்நாடக மேல் சபையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு வருகிற 30-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 13ஆம் தேதி தொடங்குகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் 30-ந் தேதி மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் MLA-க்கள் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள். சட்டமன்றத்தில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் காங்கிரசுக்கு 2 இடங்களும், பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைப்பது உறுதி என்று சொல்லப்படுகிறது.