அவருக்கு சென்னை விமான நிலையத்தில், சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க-வினர் திட்டமிட்டுள்ளனர்….

56
Advertisement

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்க முதலீட்டாளா்களுக்கு அழைப்பு விடுக்கவும், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 23ஆம் தேதி சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் முதலமைச்சரின் 2 நாள் சுற்றுப்பயணத்தில், 6 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொழுத்தாகின.

அதைத் தொடா்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 25ஆம் தேதி முதல் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது, டோக்கியாவில் 6 நிறுவனங்களுடன் 818 கோடியில் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதேபோன்று, 128 கோடியில் மருத்துவ உபகரண உற்பத்தி தொழிற்சாலை தொடங்க, ஓம்ரான் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், சிங்கப்பூா் மற்றும் ஜப்பானில் 9 நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்ப உள்ளார். இன்று இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சா்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.