ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட் பகுதியில், பெண் தோழியை அமர வைத்த விமானியிடம் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது…

165
Advertisement

கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, துபாயில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது.

விமானி ஒருவர் தனது பெண் தோழியை சந்தோஷப்படுத்துவதற்காக, அவரை அந்த விமானத்தின் காக்பிட்டில் பாதுகாப்பறையில் அமர வைத்தார். இதனால், பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கேபின் குழு உறுப்பினர், சம்பந்தப்பட்ட விமானி மீது புகார் அளித்தார். அதனடிப்படையில், ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட் பகுதியில் பெண் தோழியை அமர வைத்த விமானியிடம் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.