இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து, 16 ஆயிரத்து 561 ஆக பதிவாகி உள்ளது.

73

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து, 16 ஆயிரத்து 561 ஆக பதிவாகி உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 16 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிகை 4 கோடியே 42 லட்சத்து 23 ஆயிரத்து 557 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 18 ஆயிரத்து 53 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 73 ஆயிரத்து 94 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு புதிதாக 49 பேர் உயிரிழந்ததால், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 535 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement