இந்த மாதம் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும், Google Pay, Paytm வசதி மூலமும் பணப்பரிவர்த்தனை நடைபெறும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது….

152
Advertisement

தமிழ்நாட்டில் முதன்முறையாக காஞ்சிபுரத்தில் உள்ள 683 நியாயவிலை கடைகளிலும் QR Code மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கோவை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், வரும் 31 ஆம் தேதிக்குள் அனைத்து நியாயவிலை கடைகளிலும் Google Pay, Paytm, UPI வசதி செய்து கொடுக்க அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.