சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

72

கரூர் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு, ஆயுள் தண்டனை மற்றும் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் கிழக்கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர், கடந்த ஆண்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதைதொடர்ந்து சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததும் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து திருமுருகன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம், குற்றவாளி திருமுருகனுக்கு ஆயுள் தண்டனையும், 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.