2023-24ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை பணிகளை தொடங்கிய மத்திய அரசு

311

2023-24ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணிகளை மத்திய அரசு இன்று தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக, முதல்கட்டமாக மத்திய அமைச்சகங்களுடன் நிதி தொடர்பான ஆலோசனை நடத்தப்பட உள்ளது. முதல்நாளில் மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம், தொழிலாளர் அமைச்சகம், தகவல் – ஒளிபரப்புத்துறை அமைச்சகம், புள்ளியியல் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சகத்துடன் மத்திய நிதியமைச்சகம் ஆலோசனை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.