மணமகள் காலைத் தொட்டு வணங்கிய மணமகன்

189
Advertisement

https://www.instagram.com/reel/CS_5N9mBrQC/?utm_source=ig_web_copy_link

மணமகள் காலைத் தொட்டு மணமகன் வணங்கிய சம்பவம்
சமூக வலைத்தளங்களில் வைரலானது.

வட இந்தியாவில் நடைபெற்றுள்ள இந்தத் திருமணத்தில்
யாரும் எதிர்பாரா விதமாக மணமகன் சட்டெனக் குனிந்து
தன் புது மனைவியின் பாதங்களைத் தொடுகிறார்.

மணமகளோ வெட்கம் கலந்த புன்னகையுடன் சற்று உயரே குதிக்க,
மணமகனோ தன் வலக்கையால் புது மனைவியின் பாதத்தை
உளப்பூர்வமாகத் தொட்டு மரியாதை செய்கிறார்.

பதிலுக்கு மணமகளும் தன் கணவனின் பாதங்களைத் தொடக் குனியும்போது,
அவரைத் தனது இரு கரங்களாலும் தடுத்துவிடுகிறார். மணமகனின்
இந்தச் செயலைக் கண்ட அருகிலிருந்த உறவினர்கள் ஆனந்தமும்
பெருமையும் கொண்டு ஆரவாரம் செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள இந்தத் திருமண வீடியோவை
21 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

மனைவியை நேசிக்கத் தெரிந்த கணவன் கிடைத்தால்
மனைவிக்கு மட்டற்ற மகிழ்ச்சிதானே…

நல்ல தம்பதி. சிறப்பானதொரு தொடக்கம்.