கந்துவட்டி வழக்கு – பெண் உள்பட 2 பேர் கைது

32

ஆப்ரேஷன் கந்துவட்டி திட்டத்தின் படி தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கும்பகோணத்தை அடுத்த ஆரியப்படைவீடு பகுதியை சேர்ந்த சந்தானதேவி என்பவர் ஐயப்பன் என்பவரிடம் 1 லட்சம் கடன் பெற்று அதற்கு வட்டியாக 60 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளார்.

ஆனால் மேலும் பணம் கேட்டு ஐயப்பன் மிரட்டியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக சந்தான தேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐயப்பனை கைது செய்தனர்.

மேலும் மாதாக்கோட்டையை சேர்ந்த உமா என்பவர் மல்லிகா என்பவரிடமிருந்து இருந்து 1 லட்சம் கடன் பெற்று அதற்கான வட்டியும் செலுத்தியுள்ளார்.

மேற்கொண்டு மல்லிகா பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மல்லிகாவை கைது செய்தனர்.