கஞ்சா ரவுடிகள் அட்டூழியத்தை தடுக்கக் கோரி போராட்டம்

39

தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் கஞ்சா ரவுடிகள் கும்பல் அப்பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப் மளிகை கடை ஆகியவற்றில் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை அபகரித்து கொள்ளையில் ஈடுபட்டனர்.

இந்த பணப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களின் செயல்கள் அங்கு உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் 200க்கும் மேற்பட்ட வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.