பதுங்கி இருந்த தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

155
death
Advertisement

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர்.

அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதனால் இருதரப்புக்கு இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.

Advertisement

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காட்டுப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.