7 ஆண்டுகளுக்குப் பிறகு கோல்டால்  ரசிகர்களை ஈர்த்த அல்போன்ஸ் புத்திரனின்  டீஸர்

345
Advertisement

கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு தனது அடுத்தப் படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளார் மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘பிரேமம்’. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனைவருமே இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள்.

‘பிரேமம்’ வெற்றிக்குப் பிறகு பல வருடங்களாக அடுத்தப் படத்துக்கான பணிகளை மேற்கொண்டு வந்த அல்போன்ஸ் புத்திரன் சுமார் 7 ஆண்டுகள் கழித்து தனது அடுத்தப் படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளார்.

‘கோல்டு’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் பிரித்திவி ராஜ் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடிக்க, மலையாள சினிமாவின் பல முக்கிய நடிகர், நடிகைகள் கெஸ்ட் ரோலிலும், முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, அனிமேஷன், ஸ்டன்ட் என அனைத்தையும் அல்போன்ஸ் புத்திரனே மேற்கொண்டுள்ளார். இதன் டீஸர் சில மணிநேரங்கள் முன்பு வெளியானது. அல்போன்ஸும், பிரித்திவி ராஜும் சேர்ந்து தயாரித்துள்ளனர்.’பிரமேம்’ போலவே முதல் பார்வையிலேயே ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது இந்த டீஸர். இது தற்போது வைரலாகி வருகிறது.