குழந்தைகள் மீது ஆசிரியர்களுக்கு உள்ள அக்கறை !

258
Advertisement

நடப்பு நாட்களில் கிட்டத்தட்ட முழு நாடும் வெப்ப அலையின் பிடியில் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அனைவரும் குடை, தண்ணீர் பாட்டிலுடன் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருமாறு நம்மீது அக்கறை காட்டுபவர்கள் அறிவுரைகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர் ஒருவரின் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.அதில், ஆசிரியர் ஒருவர் குழந்தைகளுக்கு வெப்பம் மற்றும் வெப்பம் பற்றிய பாடங்களைக் கற்பிக்கிறார்.

அப்போது தனது கையில் குடையையும் கழுத்தில் தண்ணீர் பாட்டிலையும் வைத்துக் கொண்டு தனித்துவமாக குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறார். குழந்தைகளுக்கு வேடிக்கையாக , ஆர்வத்துடன் பாடம் சொல்லிக் கொடுத்தால், கவனம் செலுத்தி புரிந்து கொள்கிறார்கள்.

இதற்கு உதாரணாமாக இருக்கும் இந்த வீடியோ ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. குழந்தைகள் நிறைந்த வகுப்பில் ஆசிரியர் கையில் குடையும் கழுத்தில் பாட்டிலையும் வைத்துக் கொண்டு மெல்லிசைப் பாடலைக் கற்றுக் கொடுக்கிறார்.

வெயிலின் சூட்டைத் தவிர்க்க, பாடி கற்பித்த பாடங்கள் பலரின் மனதை வென்றுள்ளது.