ஆசிரியரை அழவிட்டு வீட்டிற்கு அனுப்பிவைத்த மாணவர்கள்

282
Advertisement

ஆசிரியர் ஒருவரிடம், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் எது என்று கேட்டால் அவரிகளின் பதில் “தான் பணியில் இருந்த தருணத்தை தவிர வேறு எதுவாக இருக்கமுடியும் ? ” என்பார்கள்.

ஆம்,தனது நலனை பாராமல் சமூக அக்கறையுடன் வளமான எதிர்கால சந்ததியினரை உருவாக்க உழைக்கும் ஆசியிரியர்களின் பணிக்கு நிகரான பணி எதுவுமில்லை.

இது போன்று,மாணவர்கள் தன் ஆசிரியை மீதான பற்றை வெளிப்படுத்திய வீடியோ ஒன்று அனைவரின் இதங்களை கவர்ந்துவருகிறது.

ஆசிரியை ஒருவர், 50 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றிவந்தார்.அவரின் ஓய்வு நாளும் வந்தது.கடந்த 50 ஆண்டுகாலமாக பல்வேறு சவால்களை சந்தித்து ,ஆயிரக்கனான மாணவர்கள் வாழ்வில் முன்னேற உறுதுணையாக இருந்துள்ளார்.

பள்ளியில் இவரின் கடைசி தினத்தன்று,பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் அவரை வழியனுப்பி வைக்கும் தருணம்,அவரை உணர்ச்சிவசப்பட வைத்தது.மாணவர்கள் கைகளை தட்டி நன்றி கூறும்விதம் வழி அனுப்பிவைக்கின்றனர்.

மாணவர்களின் அன்பிற்கு மத்தியில் ஆசிரியை கண்ணீர் உடன் வெளியேறினார்.இதனை அவரின் மகள் படம்பிடித்து அவரின் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.

பார்ப்பவர்களை உணர்ச்சிவசப்படவைக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.