கணித ஆசிரியர் கைவண்ணத்தில் சோலார் கார்

323
Advertisement

11 வருட கடின உழைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு பின், காஷ்மீரில் ஸ்ரீநகரை சேர்ந்த பிலால் அஹமத் என்னும் கணித ஆசிரியர், சூரிய ஒளியில் இயங்கும் காரை தயாரித்துள்ளார்.

சாதாரண மக்கள் வாங்கி பயன்படுத்தக்கூடிய விலையில் சொகுசு கார்களை உருவாக்க எண்ணிய பிலால், அதனாலேயே இந்த காரை டெவெலப் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா உட்பட பிலாலின் முயற்சிக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

2009இல் இருந்து பல வீடியோக்களை பார்த்து தாமாக பல விஷயங்களை கற்றுக்கொண்டதாக கூறும் பிலால், தனது காரில் Monocrystalline solar panelகளை பயன்படுத்தி இருப்பதால் குறைவான சூரிய ஒளியிலும் தடை இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது என குறிப்பிட்டுள்ளார்.