மழையில் பள்ளிச்சிறுவர்களை வைத்து ஆசிரியை செய்த மட்டமான செயல்

148
Advertisement

பள்ளியில் மழைநீர் சூழ்ந்தநிலையில் பள்ளியை விட்டு வெளியேற மாணவர்களை மழையில் நினையவைத்து நாற்காலிகள்  மூலம் ஏறிச்சென்ற ஆசிரியையின் வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில்  இடைவிடாது பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.இதற்கிடையில் ஒரு பள்ளியின் வளாகம் முழுவதும் மழைநீர் முழங்கால் அளவு தேங்கி நிற்கிறது.

இதையடுத்து அப்பள்ளி ஆசிரியை ஒருவர்,தேங்கி நிற்கும் மழைநீரில் கால் பட்டுவிடக்கூடாது என்பதற்காக அங்கு பயலும் சிறுவர்கள் , மழையில்  நினையவைத்து வகுப்பறையிலிருந்து வெளியே மழைநீர் தேங்காமல் சமமாக உள்ள நிலப்பரப்புவரை பிளாஸ்டிக் நாற்காலிகளை வரிசையாக வைக்கச்சொல்லி அதன் மீது நடந்து செல்கிறார் அந்த ஆசிரியை.

Advertisement

அப்பள்ளி சிறுவர்கள் மழையில் நினைத்தபடி சேற்றில் நின்றுகொண்டு இருக்கின்றனர்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியதை அடுத்து அந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.