ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவிகளுக்கு நடன ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, நடன ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இது குறித்து போலீசிலும் புகார் அளித்துள்ளார்.
புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலியல் தொல்லை கொடுத்த நடன ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
