வேன் கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்

438

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியில், மதுரை கிழக்குத் தெருவில் இருந்து, திருமண நிகழ்ச்சிக்காக பட்டுக்கோட்டை நோக்கி சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர், இந்நிலையில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.