தமிழக பட்ஜெட் 2022-23 நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்

213
Advertisement

2022-23ம்ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.இதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடுகிறது.

பொதுமக்களும் பட்ஜெட் அறிவிப்புகளை தெரிந்துகொள்ள நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்பின் அலுவல் ஆய்வு கூட்டம் கூடி, எத்தனை நாட்கள் பட்ஜெட் மீது விவாதம் நடத்துவது என முடிவு செய்து, சட்டசபை நடக்க வேண்டிய தேதிகளை அறிவிக்கும்.காகிதம் இல்லாத பட்ஜெட் என்பதால் எம்எல்ஏக்களுக்கு பட்ஜெட் நகல் வழங்கப்படாது.