நாளை கடைசி நாள்

336

அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பெறும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இணையதள பிரச்சினைகள் ஏற்பட்டதால் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஜூலை 10 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில், மாணவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் பெற விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.