சூரியனை விட்டு பூமி தூரமாகச் செல்லும்போது என்ன நடக்கும்?

372

சூரியனை விட்டு பூமி தூரமாகச் செல்லும்போது, பூமியின் தட்ப வெட்ப நிலையில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் உடலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அறிவியலாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சூரியனைச் சுற்றிவரும் பூமியின் பாதை கோழிமுட்டையின் வடிவத்தைப் போன்று நீள்வட்டமாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பூமி நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகையில், ஒரு கட்டத்தில் சூரியனுக்கு மிக அருகில் செல்லும். ஆண்டுதோறும் டிசம்பர் 3-ம் தேதி வாக்கில் நிகழும் இந்த நிலையை Perihelion என்று அழைப்பார்கள்.

மற்றொரு காலகட்டத்தில் சூரியனிலிருந்து பூமி தூரமாகவும் செல்லும். ஜூலை மாதத்தில் நிகழும். இந்த நிலையை Aphelion நிலை என்று அறிவியலாளர்கள் அழைக்கிறார்கள்.

இந்த இரண்டு நிகழ்வுகளின்போதும் பூமியின் தட்ப வெட்ப நிலையில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என என்று அறிவியலாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஒருநாளில், பூமி சூரியனுக்கு சற்று அருகிலும், 6 மாத இடைவெளிக்கு பிறகு சற்றுத் தொலைவுக்குச் செல்லும். இவை ஒவ்வொரு ஆண்டும் நிகழ்பவை என்றும் இந்த ஆண்டும் மட்டும் நிகழ்பவை அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பூமியில் ஏற்படும் பருவ காலங்களுக்கும், பூமி – சூரியனுக்கும் இடையிலான தொலைவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். Aphelion நிலையின்போது, சூரியனிலிருந்து பூமி தூரமாக செல்வதால் குளிர் அதிகமாகும் என்றும் அதனால் உடல்வலி, காய்ச்சல், இருமல், சுவாச பிரச்சனைகள் போன்ற பாதிப்பும் ஏற்படாது எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.