“4 நாட்களுக்கு மழை தொடரும்”

154
rain
Advertisement

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில், நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

அதைதொடர்ந்து குளிர்ந்த காற்றுடன் கனமழை பெய்தது.

பரமக்குடி, மஞ்சூர், ராமநாதபுரம், சத்திரக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

Advertisement

இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோன்று, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூர், குன்றக்குடி, கோட்டையூர், கண்டனூர், புதுவயல், சாக்கோட்டை ஆகிய இடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மழை பெய்த பகுதிகளில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது.

திருப்பூர், அவிநாசி, மங்களம், உடுமலை, தெக்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பரவலாக மழை பெய்தது.

இதேபோன்று தேனி மாவட்டம், கூடலூர், லோயர்கேம்ப், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டையில் மழையின் போது ஆடு மேய்த்துக் கொண்டிருந்து ஜோதி என்ற பெண் இடி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மயக்கம் அடைந்த மற்றொரு பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.