ஊரடங்கு நீட்டிப்பா.? – இன்று முக்கிய அறிவிப்பு

lockdown
Advertisement

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற இருந்த நிலையில் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்த தினசரி தொற்று பாதிப்பு, தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 23ஆம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

Advertisement

இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்து, அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலை 11:30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ள திரையரங்குகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

தொற்று எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக மேலும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.