தமிழகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணி நாளை தொடங்குகிறது

408
Advertisement

தேசிய குடற்புழு நீக்க வாரம் மார்ச் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும்அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளிகள், கல்லூரிகளில் தேவைக்கேற்ப குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நடத்தபடுகின்றன.

1 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 20முதல்30 வயதுடைய பெண்களுக்கும் (கருவுறாத மற்றும் பாலூட்டாதவர்கள்) குடற்புழு நீக்க மாத்திரை நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் 4 மணி வரையிலும் வழங்கப்படவுள்ளது. விடுபட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக வரும் 21-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

குடற்புழு நீக்க மாத்திரைகளால் குடற்புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்படுகிறது. ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கிறது. நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. நினைவாற்றல், அறிவுத்திறன் மற்றும் உடல்வளர்ச்சியை மேம்படுத்தவும். ஆரோக்கியமாக இருக்கவும் பயன்படுகிறது. எனவே, அனைத்து பெற்றோர்களும், இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி, தங்கள் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை பெற்று கொண்டுள்ளனரா என்பதனை உறுதிசெய்து, இந்த முகாம் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.