பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க முடிவு

385

சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் பொது இடங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய  வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

சென்னை மாநகரில் உள்ள 15 மண்டலங்களிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிபடுத்த வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மேலும், முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.