ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

185

ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உத்தரவாதங்களை, மத்திய விளையாட்டு அமைச்சகம் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் முதல்வர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.