உரிமைத்தொகையில் மகளிரை ஏமாற்றிய திமுக பட்ஜெட் ! – ம.நீ.ம

412
Advertisement

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை இன்று காலை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் மக்கள் நீதி மையம் பட்ஜெட் குறித்து கடுமையாக சாடியுள்ளது

இது குறித்து மக்கள் நீதி மையம் பகிர்ந்துள்ள அறிக்கையில் ,

உரிமைத்தொகையில் மகளிரை ஏமாற்றிய திமுக பட்ஜெட் !

சட்டமன்றத் தேர்தலின்போதும், உள்ளாட்சித் தேர்தலின்போதும் மகளிர் உரிமைத் தொகையை வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம் என்று முழங்கியது திமுக.

கடந்த பட்ஜெட்டில், உரிமைத் தொகையைப் பெறுவதற்கு உரிய பயனாளிகளைக் கண்டுபிடித்து வழங்குவோம் என்று அடக்கி வாசித்தது.

இன்றைய பட்ஜெட் உரையில்,

“நிதி நிலைமை மேம்பட்டதும் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்படும்” என்று மழுப்பலாகப் பேசி வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு அப்பட்டமாக மகளிரை ஏமாற்றியுள்ளது திமுக.

மகளிர் உரிமைத் தொகையை முதலில் முன்வைத்த மநீம வின் வாக்குறுதியைக் காப்பியடிக்கக் காட்டிய வேகத்தில் சிறிதளவாவது அதனைச் செயல்படுத்துவதில் காட்டியிருந்தால் மகளிர் உரிமைத் தொகை இன்று சாத்தியமாகியிருக்கும்.

https://twitter.com/maiamofficial/status/1504724089423900672/photo/1

வாக்குகளை வாங்குவதற்காகக் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்படும் என்று நம்பி ஏமாற வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது திமுக.

திமுக மாறவில்லை.. மக்கள்தான் மாறவேண்டும் !! என சாடியுள்ளது.