“வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் சமர்ப்பணம்”

agriculture
Advertisement

தமிழக சட்டப்பேரவையில், வேளாண் துறைக்கான தனிபட்ஜெட் முதன்முறையாக இன்று, காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு முக்கிய அறிவி்ப்புகளை வெளியிட்டார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை சமர்ப்பிப்பதாக கூறினார்.

நடப்பாண்டில், கொள்முதல் விலையை உயர்த்தி, ஒரு குவிண்டால் சன்னரக நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2 ஆயிரத்து 60 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

Advertisement

சாதாரணரக நெல் குவிண்டாலுக்கு 75 ரூபாய் அதிகரிக்கப்பட்டிருப்பதால், 2 ஆயிரத்து 15 ரூபாயாக கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

ஒரு டன் கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக 150 ரூபாய் வழங்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்தார்.