தாம்பரம் காவல் ஆணையராக பணிபுரிந்த ரவி, அண்மையில் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் தாம்பரம் மாநகர புதிய காவல் ஆணையராக அமல்ராஜ், இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக ஆணையர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த அமல்ராஜுக்கு, அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாம்பரம் புதிய காவல் ஆணையர் அமல்ராஜ், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் இரண்டாவது ஆணையராக பொறுப்பேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.
சட்டம், ஒழுங்கு பாதுகாப்பது, குற்றங்களை தடுப்பது ஆகியன மட்டுமின்றி, பொதுமக்கள் பாராட்டும் படியாக செயல்பட முயற்சி செய்வேன் என்று அவர் உறுதியளித்தார்.