கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி மற்றொரு கார் மீது மோதி விபத்து

299

தாம்பரம் அடுத்த முடிச்சூர் மதனபுரம் சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது.

பின்னர் கார், சுழன்றபடி  மற்றொரு காரின் மீது மோதியது.

விபத்தில் காரில் சிக்கிய தாய், மகன் இருவரும் படுகயாங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக தாம்பரம் – முடிச்சூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த விபத்தின் அதிர்ச்சி சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.