பெண் குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்

309

கரூரில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக கணவரின் நண்பர் மீது புகார் தெரிவித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கரூர் மாவட்டம் ராயனூர் அருகே உள்ள பெண் தனது குழந்தைகள் மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார். கணவர் வெளியூரில் உள்ள நிலையில், கணவனின் நண்பர், பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து வீடியோ காட்டி அந்த பெண்ணிடம் பணம் பறித்துள்ளார்.

பெண்ணிடம் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் வாங்கிய, நபர் மீண்டும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண், குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.